
தேர்தல் விதிமுறை மீறல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரங்கள் இல்லாத 48 மணித்தியால காலப்பகுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் கண்டியில் 5900 துண்டு பிரசுரங்களுடன் கைது செய்யப்பட்டிருந்ததுடன், மற்றையவர் 3845 துண்டு பிரசுரங்களுடன் மாதம்பேயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply