
வாக்கெண்ணும் பணிகளில் பிரச்சினை எதுவும் இடம்பெறாது இருந்தால், நாளை மாலைக்கு முன்னதாக முடிவினை அறிவிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்கு பதிவுகள் நிறைவுப் பெற்றதன் பின்னர் அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் இடம்பெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த ஜனாதிபதி தேர்தல் பெரிதளவான விபரீதங்கள் இல்லாமல் நிறைவுக்கு வந்துள்ளது.
இரத்னபுரியின் அஞ்சல் மூல முதலாவது பெறுபேற்றை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வழங்க வாய்ப்பு உள்ளது.
ஏனைய வாக்கெண்ணும் பணிகளில் பிரச்சினை எதுவும் இடம்பெறாது இருந்தால், நாளை மாலைக்கு முன்னதாக முடிவினை அறிவிக்க முடியும். இல்லையென்றால் திங்கட் கிழமை வரை நீடிக்கப்படலாம்.
இரண்டு தனியார் தொலைக்காட்சிகளும், அரச தொலைக்காட்சியும் ஒத்துழைத்திருந்தால் இந்த தேர்தலை இதனை விட நாங்கள் சிறப்பாக செய்திருக்கலாம்’ என கூறினார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணும் பணிகள் இன்று மாலை 5.15 அளவில் ஆரம்பமாகிய நிலையில், கொழும்பு மாவட்டத்திற்கான அஞ்சல் மூல வாக்கு எண்ணும் பணிகள் கொழும்பு ரோயல் கல்லூரியிலும், கம்பஹா மாவட்ட அஞ்சல் மூல வாக்கு எண்ணும் பணிகள் வெயாங்கொடை வித்தியாலோக வித்தியாலத்திலும் இடம்பெறுகின்றன.
Leave a Reply