
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
யாழ். குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று(சனிக்கிழமை) காலை அவர் தமது வாக்கினை பதிவிட்டுள்ளார்.
‘ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பேணுவதற்கும் நான் நேர காலத்துடன் வாக்களித்து விட்டேன். அனைத்துப் பிரஜைகளுக்கும் இதையே செய்வார்களென்று எதிர்பார்க்கிறேன்’ என தனது முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.
Leave a Reply