யாழில் மழைக்கு மத்தியிலும் சுமூகமான வாக்களிப்பு

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யம் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மாலை 5 மணிவரை வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் தற்போது சுமூகமான முறையில் வாக்குப்பதிவு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மல்லாகம், தெல்லிப்பளை, கீரிமலை, காங்கேசன்துறை, ஊரணி, பலாலி, வல்வெட்டித்துறை பகுதிகளின் சுமூகமான முறையில் வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது.

அத்தோடு யாழ்மாவட்டத்தில் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *