
வவுனியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
காலை 7 மணி முதல் வவுனியாவில் அமைந்துள்ள 142 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் காலை 7 மணிக்கு முதலாவது ஆளாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.


Leave a Reply