
குருநாகல்- வெல்லவ பொலிஸ் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வாக்குச் சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கள்ள வாக்குச் சீட்டுகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 36 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிஸார் சோதனையிட்டபோது, இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 வாக்குச் சீட்டுகளைக் கண்டறிந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்தே குறித்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்திய இருவரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Leave a Reply