
புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) 11.45 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இதன்போது அதிஸ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை மரங்களை வீதிக்கு குறுக்காக போட்டு தடுத்து நிறுத்திய பின்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் சென்றிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தந்திரிமலை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்


Leave a Reply