
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலம் இடம்பெற்றன.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைவருமாகிய அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்கள் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தியும் இனிப்பு பண்டங்கள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகளின்படி கோட்டபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply