கோட்டாவை வாழ்த்தி பதவி விலகினார் சஜித்

2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

அதேபோல், பொதுமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து, ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகித்த பிரதித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சில வாரங்களில் தனக்கு ஆதரவளித்த அனைவருடனும், தனக்கு வாக்களித்த பொதுமக்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் கலந்துரையாடி தனது அரசியல் வாழ்வின் எதிர்காலம் குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 26 வருட காலமாக தன் மீது நம்பிக்கை வைத்து தனக்காக வாக்கினை செலுத்திய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் தனது ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சஜித் பிரேமதாச குறித்த அறிக்கையின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *