
கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டிற்கான இலங்கை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தற்போது வரையில் வெளியாகியுள்ள வாக்குகளில் கோத்தபாய ராஜபக்ச முன்னிலை வகித்து வருகின்றார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், கோத்தபய ராஜபக்சவுக்கு வாக்களிக்காத இலங்கை தமிழர்களுக்கு நன்றி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply