
வடக்கு – கிழக்கு மக்களை வாக்களிக்க வேண்டாம் என சிலர் பிழையாக வழி நடத்த முற்பட்ட போதும் அவற்றினை நிராகரித்து தேசிய அரசியலில் நீங்கள் ஈடுபாடுடையவர்கள் என்பதை சர்வதேசத்திற்கு தெட்டத் தெளிவாக வாக்களிப்பதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.
சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை. புதிய ஜனாதிபதி @GotabayaR பற்றியும், எமது @PodujanaParty பற்றியும் நீங்கள் அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை என்பதை நான் வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களிலும் நீங்களும் உரித்துடைய பங்காளிகள் என்பதனை எமது கட்சியும், எமது புதிய ஜனாதிபதியும் உறுதிப்படுத்துவோம் எனும் உத்தரவாதித்தினை உங்களுடன் மிக நெருக்கமாக பழகும் ஒருவன் என்ற வகையில் உரிமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

Leave a Reply