
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. எனினும், அதிகரிப்புக்கான நாள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
கோதுமை மாவின் இரண்டு விநியோக நிறுவனங்கள் இரண்டு தடவையாக விலையை அதிகரித்தபோதும் பாணின் விலை அதிகரிக்கப்படவில்லை.
எனினும், தற்போது இரண்டு நிறுவனங்களும் இந்த விலையுயர்வுக்கு எழுத்துமூலம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கோதுமை மாவின் விலை உள்ளூர் சந்தையில் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply