
வன்னி மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச அமோக வெற்றியை பெற்றுள்ளார்.
இதற்கமைய அந்த தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச 174,739 வாக்குகளை பெற்றுள்ளதோடு, கோட்டாபய ராஜபக்ஷ 26,105 வாக்குகளையும், ஆரியவங்ஸ திசாநாயக்க 2,546 வாக்குகளையும், எம்.கே. சிவாஜிலிங்கம் 1,295 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 47,594 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளார், அடுத்தபடியாகவுள்ள கோட்டாபய ராஜபக்ஷ 4,252 வாக்குகளையும், ஆரியவங்ஸ திசாநாயக்க 902 வாக்குகளையும் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் 251 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
வன்னி மாவட்டம் வுனியா தேர்தல் தொகுதியின் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 65,141 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளதுடன் கோட்டாபய ராஜபக்ஷ 13,715 வாக்குகளையும், ஆரியவன்ஸ திசாநாயக்க 901 வாக்குகளை பெற்றுள்ளதுடன் அனுரகுமார திசாநாயக்க 667 வாக்குகளை பெற்றுள்ளார்.
மேலும் வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 47,594 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளார், அடுத்தபடியாகவுள்ள கோட்டாபய ராஜபக்ஷ 4,252 வாக்குகளையும், ஆரியவங்ஸ திசாநாயக்க 902 வாக்குகளையும் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் 251 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
அத்துடன் வன்னி மாவட்ட மன்னார் தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 53,602 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 6,435 வாக்குகளையும், ஆரியவங்ஸ திசாநாயக்க 695 வாக்குகளையும் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் 378 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
அதேபோல் வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 8,402 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 1,703 வாக்குகளையும், அனுரகுமார திசாநாயக்க 147 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Leave a Reply