
இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சற்று முன்னர் இடம்பெற்ற தேர்தல் அறிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொளவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினர் அங்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் தேர்தல்கள் செயலகம் அமைந்துள்ள ராஜகிரிய பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை பார்ப்பதற்காக செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனை அடுத்து அங்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply