
நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபாய ராஜபக்ஸ இன்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதியாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர்கள் இன்று திங்கட்கிழமை(18) மதியம் மன்னார் பஸார் பகுதியில் பாற்சோறு வழங்கி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர சபை உறுப்பினருமான செல்வக்குமரன் டிலான் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது பஸார் பகுதியில் பட்டாசு கொழுத்தி மக்களுக்கு பாற்சோறு (கிரிபத்) வழங்கி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர சபை உறுப்பினருமான செல்வக்குமரன் டிலான், இலங்கை திரு நாட்டின் நிறை வேற்று அதிகாரம் கொண்ட 7 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள பொது ஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ அவர்களுடைய வெற்றியை சிறுபான்மை மக்களாகிய மன்னார் மாவட்ட மக்களாகிய நாங்கள் இவ் வெற்றியை கொண்டாடுகின்றோம்.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்களின் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply