
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 29 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதன்படி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 157 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த 20 க்கு 20 கிரிக்கட் தொடரை 2 க்கு 1 என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.
Leave a Reply