
கடந்த 18-11-2006 ஆம் ஆண்டு வவுனியா விவசாய கல்லூரிவளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியா விவசாயக் கல்லூரியில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தால் அனுஸ்டிக்கப்பட்ட இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு நினைவுச் சுடர்ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாக இரத்ததான நிகழ்வு ஒன்றுவிவசாயக்கல்லுரி மாணவர்களால் நடாத்தப்பட்டதுடன், அவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் சங்கரலிங்கம் கிந்துஜன், சித்திரவேல் கோபிநாத், இராமச்சந்திரன் அச்சுதன், சித்திக்காசன் றிஸ்வான்,சுந்தரலிங்கம் ஜங்கரன் ,திருநாமம் சிந்துஜன் ஆகியோரே சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply