
மனித உரிமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் தொடர்ந்தும் பணியாற்ற தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அமைப்பின் டுவிட்டரில் பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில் “ஜனாதிபதி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்தமையினை நாம் வரவேற்கின்றோம். நிலையான வளர்ச்சி, அமைதி மற்றும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் இணைந்து செயற்பட தயார்” என குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply