
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது தேர்தல் விஞ்ஞாபனம் தோல்வியுற்றதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக இருப்பதற்கு தார்மீக உரிமை இருக்கின்றதா என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று (19) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறை படுத்துவதற்காக பிரதமர் அதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply