
ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராய விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இந்த கூட்டம் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லாவிடின் எதிர்க்கட்சியில் பங்காற்றுவதா என்பது குறித்து இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது.
அதேபோல நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் இதன்போது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவுள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் நேற்று கூடி கலந்துரையாடியதுடன் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply