
கோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்த 27 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் 50 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அதிகார சபை குறிப்பிட்டுள்ளது
அதேநேரம் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கும் வர்த்தகர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
மேலும் இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள், கோதுமை மாவின் விலையை அதிகரித்ததுடன் இந்த சந்தர்ப்பங்களில் அதிக விலைக்கு கோதுமையை விற்பனை செய்த 400 இற்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
இதேவேளை புதிய விலைக்கு அமைய, 450 கிராம் பாணின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாயினால் அதிகரித்தமைமேயே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply