
இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று(புதன்கிழமை) தலதா மாளிகைக்குச் சென்று விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இன்று காலை 10.20 மணியளவில் தலதா மாளிகைக்கு வருகைத் தந்த புதிய ஜனாதிபதியைக் காண, நூற்றுக்கணக்கான மக்கள் வருகைத் தந்திருந்தனர்.
மக்களின் கோஷங்களுக்கு மத்தியிலும் செங்களம்பள வரவேற்புக்கு மத்தியிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலதா மாளிகைக்கு சென்றார்.
இதன்போது, இவருக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பும் வழங்கப்பட்டது. பின்னர் விசேட மதவழிபாடுகளில் ஈடுபட்ட அவர், நினைவுச் சின்னமொன்றையும் வழங்கிவைத்தார்.
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் தலதா மாளிகைக்குச் சென்று முதன்முதலாக மதவழிபாடுகளில் ஈடுபடுவது சம்பிரதாயபூர்வமான ஒரு நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply