பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

அதற்கமைய 450 கிராம் பாணின் விலை நள்ளிரவு முதல் 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாயினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *