
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட கார் மேல் நகர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 70 இற்கும் அதிகமான குடும்பத்தினர் குடி நீர் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதீக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த கார் மேல் நகர் கிராமத்திலிருந்து ஆழ் துளை கிணறு மூலமாக சிலாவத்துறைப் பகுதிக்கு குழாய் மூலமாக நீர் கொண்டு செல்லப்பட்டு சிலாவத்துறைப்பகுதியில் உள்ள 56 வீட்டுத்திட்டம் உற்பட அனைத்து பகுதிகளுக்கும் குடி நீர் வழங்கப்படுகிறது.
ஆனால் ஆழ் துளைக் கிணறு மூலமாக நீர் பெறப்படும் இந்த கிராமத்து மக்கள் குடிப்பதற்கு நீர் இல்லாத நிலையில் உள்ளனர். இந்த கிராமத்திலிருந்து நீர் செல்லும் குழாயில் ஏற்பட்டுள்ள துவாரத்தின் வழியாக கீழே சிந்தும் தண்ணீரையே இந்த மக்கள் பல காலமாக குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

இங்குள்ள ஆழ்துளைக் கிணறு மூலமாக நீர் உறிஞ்சப்படுவதால் அருகில் உள்ள கிணறுகளில் நீர் வற்றி விடுகிறது என்றும் இது தொடர்பாக அனைத்து அரச அதிகாரிகளுக்கும் கடிதம் மூலமாக தெரியப்படத்தியும் எமது குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு எவரும் முன் வரவில்லை என்று கார் மேல் நகர் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
அத்துடன் குறித்த பகுதியில் மோட்டர் போடுவதற்கு முன்பாகவே மக்கள் வரிசையில் காத்த நின்று வீணாக போகும் நீரை பெறுவதற்கு பெரும்பாடு படுவதாகவும் கவலையுடன் தெரிவித்த மக்கள் முசலி பிரதேச சபை தவிசாளர் எமது குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு முன்வரவேண்டும் என்றும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply