யாழ். – சுன்னாகம் உடுவில் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

யாழ். – சுன்னாகம் உடுவில் பகுதியில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி  உயிரிழந்துள்ளார்.

டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான மாணவி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த 3 தினங்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி (வயது -9) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த 16ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிறுமி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபப்பட்டார்.

அவருக்கு டெங்கு நோய்த் தொற்று உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை மல்லாகம் பிரதேசத்திற்கு பொறுப்பான திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மோகன் மேற்கொண்டார். மேலும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *