வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளராக ரவிநாத ஆரியசிங்க

வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளராக ரவிநாத ஆரியசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் அரச துறையின் உயர் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

அந்தவகையில் ஜனாதிபதியின் செயலாளராக பீ.பி.ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, நிதி அமைச்சின் செயலாளராக ஆட்டிக்கல ஆகியோர் இன்று காலை நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவிநாத ஆரியசிங்க மீளவும் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றிய ரவிநாத ஆரியசிங்க, 2018 இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *