
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட சிவன் கோவில் பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாது குன்றும் குழியும்,சேரும் சகதியுமாக காணப்படும் வீதியினை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வீதியினை பயன்படுத்தி வரும் பாடசாலை மாணவர்கள், பயணிகள் மற்றும் சிறுவர்களும் நளாந்தம் பயணம் செய்து வருவதோடு,மத்ரஸா நகர்,இரண்டாம் குலனி மற்றும் மூன்றாம் குலனி மக்கள் கந்தளாய் நகருக்கு செல்வதாக இருந்தால் சிவன் கோவில் பிரதான வீதியினூடாகவே செல்ல வேண்டியுள்ளது.இவ் பிரதான வீதியில் பெரிய சிவன் கோவிலொன்றும், பாடசாலையொன்றும் காணப்படுகின்றது.தினமும் கோவிலுக்குச் செல்வோரும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வீதியினை பயன்படுத்துவோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இவ்வீதியினை புனரமைத்து தருமாறு உரியவர்களுக்கு அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது ஆட்சிபீடமேறிய புதிய ஜனாதிபதியின் ஆட்சியிலாவது இவ் சிவன்கோவில் வீதி புனரமைக்கப்படுமா என பிரதேச மக்கள் அங்கலாய்கின்றனர்.

Leave a Reply