
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் வழமையை விட அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பதில் காவற்துறை மா அதிபரை தெளிவுப்படுத்தியதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அவரினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், அரசியல் பழிவாங்கல் மற்றும் தேவையற்ற முறுகல் ஏற்படக் கூடும் என நாட்டு மக்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, பாதுகாப்பு தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவற்துறைமா அதிபர், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர், காவற்துறை அத்தியட்சகர், உதவி காவற்துறை அத்தியட்சகர், காவற்துறை நிலை பொறுப்பதிகாரிகள் ஆகியோர் பொறுப்பு கூற வேண்டும் என பதில் காவற்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய இனம், மதம்;, கட்சி பேதங்கள் இன்றி சமாதானமாக வாழக் கூடிய சூழலை முன்கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
Leave a Reply