
வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று குழந்தைக்கு மேல் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 10,000 ரூபா நிதி வழங்குவதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகராட்சிமன்ற அமர்வு நேற்று (19) இடம்பெற்றபோது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் மக்கள் சனத்தொகையில் குறைவாக உள்ளமையினால், தம்பதியர் மூன்று குழந்தைக்கு மேல் பிரசவித்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 10,000 ரூபா நிதி வழங்க வேண்டுமென பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு அனைத்து உறுப்பினர்களும் சம்மதமளிக்க, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Leave a Reply