
இடைக்கால அரசாங்கமொன்றை நியமித்தமைக்கான காரணத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
15 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
தேர்தலுக்கு செல்ல வேண்டும். ஆனால் நாம் இடைக்கால அரசாங்கமொன்றை நியமித்தோம். காரணம் நாம் நாட்டு மக்களுக்கு சில வாக்குறுதிகளை வழங்கினோம்.
அதனாலேயே நாம் 15 பேரை அமைச்சரவைக்கு நியமித்தோம். அதேபோல தேர்தலின் போது மக்கள் எம்மை நம்பி வாக்களித்தார்கள்.
மக்களின் எதிர்பார்ப்பை நாம் முன்னின்று செய்ய வேண்டும் மக்களின் நம்பிக்கைக்கு நாம் துரோகம் செய்ய முடியாது.
அதனாலேயே நாம் 15 அமைச்சர்களை நியமித்தோம். அதேபோல நாம் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவுள்ளோம்.
செயலாளர்கள் உட்பட அமைச்சர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன், இராஜாங்க அமைச்சர்களுக்கும் தமது கடமைகளை செய்ய இடமளிக்கவும்.
ஏனென்றால் கடந்த காலங்களில் இராஜாங்க அமைச்சர்களுக்கு அதிகாரம் காணப்படவில்லை. இருந்தாலும் அவர்கள் கையொப்பமிட மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளனர்.
அதில் அவர்கள் கையொப்பம் இடுவதையே பழகி இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு கடமையாற்ற இடமளிக்கவும் என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply