
இந்தியாவில் மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெறவுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மானசரோவர் பகுதியைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் (21 வயது), தனது ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூர்த்தி செய்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடந்த நீதிபதிகளுக்கான தகுதி தேர்வில் கலந்துகொண்ட மயங்க் பிரதாப், அதிலும் தேர்ச்சிபெற்றார்.
இந்நிலையில் விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இதனூடாக அவர், இந்தியாவிலேயே மிக இள வயதில் நீதிபதி ஆனவர் எனும் சிறப்பையும் பெறவுள்ளார்.
நீதிபதி ஆவதற்கு குறைந்தபட்ச வரம்பாக இருந்த 23 வயதை 21ஆக ராஜஸ்தான் நீதிமன்றம் இந்த ஆண்டு குறைத்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply