எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை

எதிர்க்கட்சி பதவியை  சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “சஜித் பிரமேதாச, மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற இளம் தலைவர்.

எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்ரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும். அதுவே ஜனநாயக மரபாகும்.

நாம் யாரையும் ஆழமாக ஆதரிக்கவில்லை. தேர்தலில் நின்ற இரு பகுதியினருடனும் தொடர்புகளை வைத்திருந்தோம்.

மேலும் எமது எதிர்கால நிலைப்பாடு குறித்து, ஜனநாயக ரீதியான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம். எமது மக்களைப் பொறுத்தளவில் நடந்து முடிந்தத் தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். அவர்களிடத்தில் ஒற்றுமை மேம்பட்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

எனவே எதிர்காலத்திலும் மக்கள் ஓரணியாக நின்றுச் செயற்படவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *