
எந்தவொரு உத்தியோகபூர்வ இல்லங்களையும் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ நடவடிக்கைக்காக மாத்திரம் ஜனாதிபதி மாளிகையை ஜனாதிபதி பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்தநிலையிலேயே அவர் தற்போது வசித்து வரும் இல்லத்தில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் கொழும்பு, மஹகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வந்தார்.
அத்துடன், பதவியில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னரும் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அமைச்சரவை அவருக்கு அனுமதி வழங்கிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply