எளிய அழகு குறிப்புகள்(Simple beauty tips)

*கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

*ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

*பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து ஒரு மாதம்  செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.   தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.

* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.

* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

*செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடியின் தன்மை மிருதுவாகவும் ,முடியின் வளர்ச்சி நற்றக இருக்கும் .

* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். . வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *