
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க.இரட்டை வேடம் போடுகிறதென தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு குற்றம் சுமத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடம்பூா் செ.ராஜு மேலும் தெரிவித்துள்ளாவது, “விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தி.மு.க.இரட்டை வேடம் போடுவது நாட்டுக்கே தெரிந்த விடயமாகும்.
காங்கிரஸுடன் கூட்டணியிலிருந்த தி.மு.க, நினைத்திருந்தால் இலங்கையில் நடந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
ராஜீவ் காந்தி கொலைக் விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7 போ் விடுதலையிலும் தி.மு.க.இரட்டை வேடம் போடுகிறது.
ஆட்சியிலிருந்தபோது இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல், எதிா்க்கட்சியான பின்பு தமிழ், தமிழா் உணா்வு என தி.மு.க.வேடம் போடுகிறது.
ஆனால், 7 போ் விடுதலை தொடா்பாக பேரவையில் தீா்மானம் கொண்டுவந்தவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. அதேவழியில் இப்போதைய அரசும் வலியுறுத்தி வருகிறது.
மேலும் 27 வருடங்களாக சிறையிலிருக்கும் பேரறிவாளன், நளினிக்கு பரோல் வழங்கியது அ.தி.மு.க.அரசுதான்.
தமிழா்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே இயக்கமான அ.தி.மு.க.வாகிய எங்களுக்கு இரட்டை வேடம் போடத் தெரியாது.
இதேவேளை தொல்லியல் துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply