குழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக  ஆமதாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளர்

குஜராத் மாநிலம்-  ஹிராபூரிலுள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து, 4 குழந்தைகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் நித்யானந்தா மீது முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பாக நித்யானந்தா, அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது ஆமதாபாத் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்களில் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன்  4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள்களான லோக முத்ரா (வயது 21)இ நந்திதா சர்மா (18 வயது) ஆகியோர் இன்னும் ஆமதாபாத் ஆசிரமத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவரது மகள்களை சந்திக்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதி வழங்க மறுத்ததால், ஜனார்த்தன சர்மா குஜராத்  உதவியை நாடினார். இதைத்தொடர்ந்துதான் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக  ஆமதாபாத் பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை  பொலிஸார் மேற்கொள்வார்கள் என்றும் இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும்” தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே,நித்யானந்தா ஹிராபூர் கிராமத்தில் ஆசிரமம் நடத்தும் நிலம் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

சட்ட விதிமுறைகளை மீறி அந்த நிலத்தை ஆசிரமம் நடத்த குத்தகைக்கு கொடுத்ததாக டெல்லி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஹிதே‌‌ஷ் புரியை கைது செய்ததாகவும் பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஆமதாபாத் புறநகர் துணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *