
கொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் இரசாயன தொழிற்சாலை ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுபெத்தை, அங்குலான சந்தியில் அமைந்துள்ள இரசாயன ஆலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இங்கு இரசாயன பொருட்கள் மற்றும் டயர் விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தீயணைப்பதற்காக மொரட்டுவை, தெஹிவளை, கல்கிசை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததாக மொரட்டுவ தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கட்டடத்திற்குள் தொழிலாளர்கள் இருந்தார்களா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னமும் மதிப்பீடு செய்யவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply