
படப்பிடிப்பு அரசியல் பணிகள் என தீவிரமாக வேலைகளுக்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் வைத்தியர்களின் ஆலோசனையின்படி கமல்ஹாசனுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனையடுத்து அவர் இன்னும் சில வாரங்கள் அரசியல் பணிகள் மற்றும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.
கடந்த 2016ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக வலது காலில் முறிவு ஏற்பட்டது. அம்முறிவினை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply