
தற்காலிக அரசாங்கத்தின் அமைச்சரவையே தற்போது பதவியேற்றதாகவும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறிள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை பதவியில் இருக்கும் தற்காலிக அரசாங்கத்தின் அமைச்சரவையே தற்போது பதவியேற்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் வாக்குகளின் மூலம் தெரிவாகும் வலுவான நாடாளுமன்றத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply