
புதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு வாழ்த்துச் செய்தியொன்றை பதிவிட்டுள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் இணைந்து ஒட்டு மொத்த இலங்கையர்களுக்கும் சேவையாற்ற எதிர்பார்ப்பதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Leave a Reply