
பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லாஸ் ஏஞ்சல்சில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் எஞ்சின்களில் ஒன்று தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த போயிங் 777 ரக விமானம் லாஸ் ஏஞ்சல்சில் இருந்து மணிலாவுக்கு நேற்று காலை 11 மணியளவில் புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் வலது பக்க எஞ்சின் பழுதாகி தீப்பற்றியது.
விமானத்தின் எஞ்சினிலிருந்து தீயும் கரும்புகையும் ஏற்படுவதை, கீழிருந்து கவனித்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
விமானத்துக்குள்ளிருந்த பயணிகளும் ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டு பயந்து அலறியுள்ளனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 347 பயணிகளும் பத்திரமாக வேறொரு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.
விமானத்தில் தீப்பற்றியது திகிலூட்டும் சம்பவம்தான் என்றாலும், தற்போது தாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்ற உணர்வு நிம்மதியை அளிப்பதாக பயணி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply