
தெலுங்கானாவில் கடந்த 47 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை மீள பெற்றுக்கொண்ட போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர்கயையும் நீக்குவதற்கு, தெலுங்கானா அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்கு எதிராக 5 ஊழியர்கள் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டனர். ஆனாலும் பேச்சுவார்த்தைக்கு அரசு முன்வரவில்லை.
தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் ஒப்படைக்கப்பட்டன. இந்த போராட்டத்தால் 200 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெலுங்கானா அரசு அறிவித்தது.
இந்நிலையில் தங்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டால் பணிக்குத் திரும்பத் தயார் என்று போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply