
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன, சுதந்திர கட்சியின் இறுதி சிரேஸ்ட தலைவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தானும், விஜய குமாரதுங்கவும் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவுடன் நெருங்கி செயற்பட்டதாகவும் அவர் ஒருபோதும் சுதந்திரக் கட்சிக்கு சேதம் ஏற்படுத்தவில்லை எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே டி.எம்.ஜயரட்னவின் மறைவு அரசியல் துறைக்கு பெரும் இழப்பு எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
Leave a Reply