
கேரளாவில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியையின் அலட்சியம் குறித்து தெரியவந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில முதல்வர் உறுதியளித்துள்ளார்.
வயநாட்டில் உள்ள சுல்தான் பதேரியில் சர்வஜனா என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஷாஹலா ஷெரின் (8) என்ற மாணவி ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஷெரின் பள்ளி அறையில் இருந்த போது சுவற்றின் ஓரத்தில் இருந்த ஓட்டையில் தனது காலை விட்டார்.
அப்போது காலில் அவரை எதோ கடித்தது போல உணர்வு ஏற்பட்ட நிலையில் பின்னர் பாம்பு என தெரியவந்தது.
இதனைப் பார்த்த சக மாணவர்கள் ஆசிரியையிடம் தெரிவித்தனர்.
எனினும் அந்த ஆசிரியை, மாணவி ஷெரினை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள் என்று கூறிவிட்டு பாடத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஷெரினை ஒரு மணி நேரத்திற்கு பிறகே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். நேரமானதால் விஷம் அதிகரித்து அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கூறினார்.
இதனை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply