
நமது உடலுக்குள் புழுக்கள் உணவு, தண்ணீரின் வழியாக தான் உடலை அடைகிறது. இது அதிகம் உடலில் இருந்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்துவிடும். அதனால் சத்துக்கள் சரியாக கிடைக்காமல் உடல் பலவீனமாகிவிடும். அதனால் ஒவ்வொருவரும் இந்தபுழுக்களை அவ்வப்போது ஒருசில உணவுகளை உட்கொண்டு வெளியேற்றிவிட வேண்டும். அதில் சில வெங்காயம் இதில் உள்ள சல்பர், ஒட்டுண்ணிப் புழுக்களை அழிக்கும். இரண்டு டீஸ்பூன் வெங்காய சாற்றினை தினமும் இரு முறை என இரண்டு வாரத்திற்குப் பருக வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
பூண்டு
இதில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள், வயிற்றில் புழுக்களை அழித்து வெளியேற்றும். அதனால் அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வதோடு, பச்சை பூண்டு சாப்பிடுவதும் சிறந்தது.
தேங்காய் எண்ணெய்
இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இதில் இயற்கையான கொழுப்புக்கள் வளமாக உள்ளது. இது வயிற்றில் உள்ள புழுக்கை அழிக்க உதவும்.
பப்பாளி விதை
இது ஒட்டுண்ணிகளை வெளியேற்றும். பப்பாளி விதையை நன்கு உலர வைத்து, நாம் சாப்பிடும் சாலட் மேல் தூவி தினமம் சாப்பிட்டு வர, வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம்.
அன்னாசி
இதன் புரோமெலைன் எனும் செரிமானத்துக்கும் உதவும் பொருள், உடலில் உள்ள நச்சுக்களை மட்டுமில்லாமல், புழுக்களையும் வெளியேற்றும்.
பூசணி விதை
செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பூசணி விதை உதவும். தவிர, வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராடி வெளியேற்றும்.
பாதாம்
இது வயிற்றுப்புழுக்களின் வளர்ச்சியைத் தடுத்து, அழித்து வெளியேற்றும். இதை தினமும் சாப்பிட்டால், வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
Leave a Reply