
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த, அயுதம் ஏந்திய ராணுவப்படையினர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பணியில் ஈடுபடும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசர சட்டத்தை பிறப்பித்தார்.
இலங்கையில் 7வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
அரசாங்க அறிவித்தலில், 40 ஆம் அத்தியாயமான பொது மக்கள் பாதுகாப்புச் கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ், என்குரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய நான், இதன் முதலாம் அட்டவணையில் குறித்துக்காட்டப்படும் ஆயுதந்தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும், இதன் இரண்டாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட பிரதேசங்களில் பொது அமைதியைப் பேணுவதற்காக 2019, நவம்பர் மாதம் 22 ஆம் திகதியிலிருந்த நடைமுறைக்கு வருமாறு இக்கட்டளை மூலம் அழைக்கின்றேன் என அறிவித்துள்ளார்.
அதன் படி இலங்கைத் தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை உறுப்பினர்கள், தமிழர் வாழும் மாவட்டங்கள் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply