
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் முகங்கொடுத்துள்ள வன்முறைகள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கூறியிருப்பதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வன்முறைச் சம்பவங்கள் தடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கூறுகையில், “ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். அத்தகைய வன்முறைகள் தடுக்கப்படும் என்று அவர் என்னிடம் உறுதியளித்திருக்கின்றார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை தேர்தல் காலத்தில் மாத்திரமன்றி, அதன் பின்னரும் உறுதி செய்வது மிகவும் அவசியமானதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச மற்றும் நகரசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பான்மையாக வாக்களித்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் சில பதிவாகியிருந்தன. அதேபோன்று அவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெறுப்புணர்வுப் பேச்சுக்களும் பரப்பப்பட்டன.
இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள வன்முறைகள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியிருப்பதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply