
கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
கொழும்பு மாலிகாவத்தையில் அமைந்துள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
நேற்றைய தினம் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply