
குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
காலி பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவி அதிகாரியாக அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இதற்கு முன்னர் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply