கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகச் சொல்லுங்கள் – தவராசா

அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் பற்றி சிறிதரன் விமர்சிக்கலாம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலைக் குள்ளநரி என்று மக்கள் முன்னிலையில் தெரிவித்துவிட்டு பின்னர் அதே ரணிலின் பின்னால் செல்கின்றார். அவ்வாறானவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விமர்சிக்கத் தகுதியில்லை.

இதேவேளை, வடக்கு கிழக்கு மக்கள் வேறு காரணங்களுக்காக கோட்டாபய ராஜபக்ஷவை நிராகரித்து இருக்கலாம். ஆனால் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மூன்று கட்சிகள் இணைந்து போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 154 ஆசனங்களைக் கைப்பற்றியது. எனினும் தனி ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி. 71 ஆசனங்களைக் கைப்பற்றியது.

மக்கள் தற்போது தெளிவாகி வருகின்றனர். முதலில் அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள். அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள்” என்றார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *